ட்விற்றர் தனது பாவனையாளருக்கு, மற்றுமொரு விடயத்தை அறிமுகம் செய்துள்ளது.
மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விற்றர், தங்களது பாவனையாளர்களுக்கு 140 எழுத்துகளுக்குள் தங்களது கருத்துகளை வெளியிடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறுஞ்செய்தியை (SMS) மையமாகக் கொண்டே இவ்வாறு அதன் எழுத்து சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கருத்து சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஆயினும் இதுவரை படங்கள், வீடியோக்கள் போன்ற இதர விடயங்களை ட்விற்றரின் இடுகையில் சேர்க்கும்போது அதற்கென 24 எழுத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த மட்டுப்பாட்டை ட்விற்றர் நேற்று (19) முதல் தளர்த்தியுள்ளது.
அதாவது, இனி உங்கள் ட்விற்றர் இடுகையில் இணைக்கும் படங்கள், வீடியோக்கள் போன்ற மேலதிக விடயங்களுக்கு எவ்வித எழுத்துகளும் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மேலும் சுதந்திரமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என சொல்கிறது ட்விற்றர்.
Post a Comment