100 முதல் 200 மில்லிஆம்ப்ஸ் (0.1Amps -0.2 Amps) வரையிலான மின்சாரம் உண்மையிலே ஆபத்தானது. உயிரையே பறிக்கக்கூடியது. 200 mA விட அதிகமான மின்சாரம் மயக்கமடைய செய்யும். தீக்காயங்களை உண்டாக்கும். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டால் உயிர்ச்சேதத்தை தவிர்க்கலாம். செயற்கை சுவாசம்(Artificial respiration) இந்த சூழலில் உதவும்.
100 mAக்கு குறைவான மின்சாரம் வலியை கொடுக்கும். மூச்சு விட சிரமமாக்கும். 10mAக்கு குறைவாக இருந்தால், மின்சாரத்தை உணர முடியும். வேறு ஒன்றும் ஆகாது.
பொதுவாக மொபைல் போன்கள் 3.7வோல்ட் Li-ion பற்றரிகளை கொண்டிருக்கும். ஐபோன் 6 மொடலில் 1810mA பற்றரி இருக்கும்.
அதாவது, 1 மணி நேரத்துக்கு 3.7 வோல்டேஜ் அழுத்தத்தில் 1.8Amps மின்சாரம் தரும். இது ஆபத்தான மின்சாரம் தான்.
ஆனால், மொபைல் போன் சார்ஜ் செய்யும்போது பேசினால், அது ஏன் வெடிக்க வேண்டும்? அல்லது மின்சாரம் பயனரின் மீது பாய வேண்டும்?
ஒரிஜினல் மொபைல் சார்ஜர்கள் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்சினை வர வாய்ப்பில்லை.
மொபைல் போன்களை சார்ஜ் போடும்போது உயரழுத்த பவர் பொயிண்ட்டில் தான் போடுகிறோம்.
அதில் ஏதேனும் ஷார்ட் சர்க்யூட் ஆனால், அது மொபைல் போனை பாதித்து, அதன் மூலம் யூஸரையும் தாக்கலாம். ஆனால், அதற்கும் மொபைல் போன் பேசுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.மொபைலை சார்ஜரில் இருந்து எடுக்கும்போது கூட மின்சாரம் தாக்கலாம். பெரும்பாலான சம்பவங்களில் போலி சார்ஜர்கள் பயன்படுத்தியதால் தான் மொபைலில் மின்சாரம் தாக்கியிருக்கிறது. எனவே, முடிந்தவரை ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.
ஒரிஜினல் சார்ஜர் இருந்தால் சார்ஜ் போடும்போது பேசலாமா? என்று கேட்டால் அதை தவிர்க்கலாம். ஏன் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
சார்ஜ் போடும்போது மொபைல் சூடாவதை பார்த்திருப்போம். அதேபோல் நீண்ட நேரம் பேசினாலும் மொபைல் சூடாகும்.
சார்ஜ் போட்டுக்கொண்டே நீண்ட நேரம் பேசுவதால், இன்னும் அதிகமாக சூடாகும். இது பற்றரியின் ஆயுளை பாதிக்கும். காதுகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.
முன்பெல்லாம் பற்றரி குண்டாக மாறுவதை கவனித்திருக்கலாம். இதுவும் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியதால் வந்த வினைதான். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், அது ஒருநாள் வெடிக்கலாம்.
தொடர்ந்து பற்றரி சூடாகிக்கொண்டே போனால், அதன் கெப்பாசிட்டி குறையும். 10 மணி நேரம் சார்ஜ் போட்டாலும் பாதிதான் சார்ஜ் ஆகியிருக்கும். அல்லது அரை மணி நேரத்திலே சார்ஜ் தீர்ந்துவிடும்.சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதால் உண்டாகும் ஹீட், சார்ஜரையும் பாதிக்கலாம்.
சார்ஜ் குறைவாக இருக்கும்போது கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருக்குமா? என்று கேட்டால் அதுவும் ஒரு கட்டுக்கதைதான்.
பற்றரியின் அளவுக்கும் கதிர்வீச்சின் அளவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அனைத்து மொபைல் நிறுவனங்களும் பல தடவை தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.
இதுவரைக்கும் நடந்த சம்பவங்கள் அனைத்திலும் டூப்ளிகேட் சார்ஜரோ அல்லது தரம் குறைந்த மொபைல்களோதான் பயன்படுத்தப்பட்டிருகின்றன. அவை ஆபத்தானவை என்பது உண்மையே.
ஆனால், அதற்கும் மொபைல் சார்ஜ் போடும்போது பேசுவதால் தான் விபத்துகள் நடக்கின்றன என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
Post a Comment