சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், அவற்றில் கைரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்பட்டதற்கு பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கைரேகை ஸ்கேனரை முன்பக்கம் வழங்குவதற்கான பணிகளை சாம்சங் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தென்கொரிய டிரேட்மார்க் கூட்டமைப்பில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காப்புரிமை பத்திரங்களில் சிறிய ரக கைரேகை ஸ்கேனர் ஒன்றை வழங்குவதற்காக முன்பக்கம் இடம் ஒதுக்கப்படுவது சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.
எசென்ஷியல் போனின் முன்பக்க கேமரா மற்றும் ஐபோன் X மேல் பக்கத்தில் அதிகப்படியான சென்சார்கள் மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டதை தொடர்ந்து சாம்சங் சாதனத்திலும் சிறிய கைரேகை ஸ்கேனர் வழங்கப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் S9 ஸ்மார்ட்போனில் சிறிய இடம் ஒதுக்கப்படுவது மற்றும் இன்ஃபினிட்டி எட்ஜ் திரை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
கேலக்ஸி S9 சாதனத்தில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இரண்டு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை குறிக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டு விமானம் ஒன்றில் பயணம் செய்ய இருந்த 200 பயணிகளுக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
Post a Comment