உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றும் தவறான முறையில் உபயோகிக்கப்பட்ட கேட்ஜெட்களில் ஒன்று ஸ்மார்ட்போன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம் அன்றாட வாழ்க்கையில் ஏறக்குறைய எல்லா பணிகளுக்கும் இது உதவுகிறது என்பதால், அது இல்லாமல் ஒன்றும் நடக்காது என்ற நிலையை எட்டியுள்ளோம்.
தகவல்தொடர்பிற்கான எளிய சாதனம் என்ற நிலையில் இருந்து ஒரு மினி கம்ப்யூட்டர் என்ற மூல செயலாக்க ஆற்றலாக மாறியுள்ள ஸ்மார்ட்போன்களின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானதாகும். எனவே தொழில்நுட்ப துறைக்கு பெருமைச் சேர்த்த 10 பிரபல ஸ்மார்ட்போன்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
மோட்டரோலா டைனாடேக், 1984
மொபைல்போன்களைப் பயன்படுத்தும் பழக்கம், கடந்த 1984 ஆம் ஆண்டு மோட்டரோலா டைனாடேக் அறிமுகம் செய்த பிறகே தொடங்கியது. நவீன கால ஃபோன்களைப் போல இல்லாமல், சார்ஜ் ஆவதற்கு சுமார் 10 மணிநேரம் எடுத்துக்கொண்டு 30 நிமிடத்திற்கு மட்டுமே பேச முடியும். வெறும் 30 ஃபோன் நம்பர்களைச் சேமிக்க முடியும் என்பதோடு, அந்தக் காலக்கட்டத்தில் அதன் விலை $4,000 என்று நிர்ணயிக்கப்பட்டது.
மோட்ரோலா ஸ்டார்டேக், 1996
முதல் முறையாக கிளாம்ஷெல் ஃபோனாக அறிமுகம் செய்யப்பட்ட இது, ஸ்டார்டேக் என்ற பெயரில், $1,000 என்ற விலையில் வெளிவந்தது. 2ஜி ஃபோனான இதில், 4x15 பண்பு பகுப்பாய்வில் அமைந்த ஒரு மோனோக்ரோம் கிராஃபிக்ஸ் திரை காணப்பட்டது. மேலும் மோனோ-ரிக்டோன்கள், அதிர்வு எச்சரிப்புகள் மற்றும் ஒரு 500எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்டிருந்தது.
நோக்கியா கம்யூனிகேட்டர், 1996
சந்தையில் முன்னணி வகிக்கும் முன்பாக, தனது இந்த முதல் ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் வெளியிட்டது. பயனருக்கு பயன்படுத்தும் வகையில் 4ஜிபி உட்பட இதில் மொத்தம் 8எம்பி கொள்ளளவு நினைவகமும், திரை மற்றும் கீபோர்ட் உடன்கூடிய ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பு காணப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் இணையதளத்தில் பிரவுஸிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிர்வகிப்பது போன்றவற்றை இந்த ஃபோன் மூலம் செய்ய முடிந்தது.
நோக்கியா 3310
வாழ்நாள் பிரபலத் தன்மையைப் பெற்ற நோக்கியா 3310 மூலம் இன்று வரை வெளியாகியுள்ள ஃபோன்களின் தரத்தை ஒப்பிட்டு பார்க்க உதவும் ஒரு அளவுகோலை நோக்கியா நிர்ணயித்தது. இந்த மொபைல்போன் உடன் எக்ஸ்பிரஸ்-ஆன் கவர்கள் மற்றும் ஒரு அமைதியான அதிர்வு மோடு ஆகியவற்றை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் 3 எஸ்எம்எஸ்-களை ஒரே நீண்ட உரைச் செய்தியாக சேர்த்து வெளியிடும் அம்சம் இருந்தது.
நோக்கியா 1100
நோக்கியா 3310 ஃபோனுக்கு அடுத்தப்படியாக, மிகவும் பிரபலமடைந்த ஃபோன் ஆகும். உலகமெங்கிலும் இன்று வரை இந்த ஃபோனைப் பயன்படுத்துவோர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும் 20 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் போதுமானது. இதன் கடினத்தன்மைக்கு பெயர்பெற்ற இந்த ஃபோனில், 50 உரைச் செய்திகளை வரை வைத்து கொள்ளலாம்.
டிரியோ 180
பாம் டிரியோ என்று பொதுவாக அழைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், பாம்ஓஎஸ் அடிப்படையிலான ஒரு ஃபிலிப்-ஃபோன் வகை காரணி மற்றும் ஒரு நிலைநிற்கக்கூடிய, மோனோகிரோம் டச்ஸ்கிரீனைப் பெற்றிருந்தது.
மோட்டோரோலா ரேஸர்
இந்த ஃபோன் மீது இருந்த விருப்பத்தை நாம் யாரும் அறிவோம். மோட்டோரோலா வெளியிட்ட இந்த ரேஸர் ஃபோன் வந்த பிறகு, மொபைல்போன் என்பது ஒரு அழகு தொடர்புடைய பெரிய கேட்ஜெட் உபகரணமாக மாறியது. இது வெளியான காலக்கட்டத்திலும் அதற்கு முன்னும் இருந்த எல்லா ஃபோன்களிலும் வைத்து பாரத்தால், இதன் தடிமன் மிகவும் குறைவாக இருந்தது. இதில் சார்ஜிங் மற்றும் இசையை கேட்கும் வகையிலான ஒரு மினியூஎஸ்பி போர்ட் அளிக்கப்பட்டிருந்தது.
ஐபோன்
வரலாற்றில் அதுவரை இல்லாத ஒரு ஆரம்பத்தை, ஐபோனின் துவக்கத்திற்கு கிடைத்தது. எழுத்தாணிக்கு (ஸ்டைலஸ்) பதிலாக, டச்ஸ்கிரீன்களில் நேரடியாக தட்டச்சு செய்யும் முறை, இந்த ஃபோனில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோனின் அறிமுகம், மொபைல்போன் பிரிவில் தொழில்நுட்ப உச்சத்தை அடைய செய்து, ஸ்மார்ட்போன்களுக்கான மூன்றாம் தலைமுறைக்கான அடிப்படை விதிமுறைகளை நிர்ணயித்தது.
சாம்சங் கேலக்ஸி நோட்
ஒரு மினி கம்ப்யூட்டரை போல எல்லா வகையான பணிகளையும் செய்ய கூடிய மொபைல்ஃபோனாக, ஒரு குறிப்பிட்ட பிரிவைக் கண்டுபிடித்து வெளியிட்ட பெருமை சாம்சங் நிறுவனத்தையே சேரும். மொபைல்போனுக்கு என்று இருந்த எல்லா எல்லைகளையும் கடந்து, கண் இமையை ஸ்கேன் செய்வது, வளைந்த திரை, தணணீரில் இருந்து பாதுகாப்பு (வாட்டர்ப்ரூஃபிங்) ஆகியவற்றை கொண்ட ஒரு முழுமையான மொபைலாக அமைந்து, அதனுடன் ஒரு எழுத்தாணியும் அளிக்கப்படும். ஆனால் இதெல்லாம் 5.3 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் ஒரு எழுத்தாணியுடன் கூடிய கேலக்ஸி நோட்டில் இருந்து தொடங்கியது.
எல்ஜி ஜி6
இப்போது எல்லா மொபைல்போன்களிலும் காணக் கிடக்கும் 18:9 விகித தன்மை கொண்ட திரை, இந்த ஸ்மார்ட்போனில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விகிதத் தன்மை வந்த பிறகு, ஃபோனின் திரைக்கும் வெளிபுறத்திற்கும் இடையிலான விகிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, முடிந்த வரை வெளிக்கட்டமைப்பை குறைத்து எதிர்காலத்திற்கு ஏற்ற தோற்றத்தையும் செயல்பாட்டையும் அளிக்க வழிவகுத்தது.
Post a Comment