பிப்ரவரி 25-ம் தேதி பார்சிலோனாவில் MWC 2018 தொழில்நுட்ப நிகழ்ச்சி எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் அந்த தொழில்நுட்ப நிகழ்சியில் நோக்கியா 6(2018) அல்லது நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மாடல்கள் புதிய மாறுபாடுகளுடன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் வசதி இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளைப் பொறுத்தவரையில், வரவிருக்கும் நோக்கியா 9 சாதனமானது வயர்லெஸ் சார்ஜிங், இரட்டை லென்ஸ் செய்ஸ் கேமரா ஆகியவற்றுடன் கூடிய க்யூஎச்டி தீர்மானம் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் என்றே கூறப்பட்டிருந்தது.
நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 4கே வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டது. பின்புறத்தில், ஒரு எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறுமென கூறப்படுகிறது.
இந்த சாதனத்தின் மற்றொரு பிரதான அம்சமாக இதன் ரேம் பகுதி திகழ்கிறது. 6ஜிபி / 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 அந்த ஐபிP68 சான்றிதழ் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குமா என்பது ரகசியமாகவே உள்ளது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் மற்ற வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில், வெளியான புகைப்படத்தில் கேமராவின் கீழே உள்ள பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் இருப்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவில் சுமார் ரூ.57,896/- என்ற விலைமதிப்பை பெறுமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9, அதில் இடம்பெறும அம்சங்களை பொறுத்து விலை நிர்ணயத்தில் வேறுபடலாம். இதற்கு முன்னதாக வெளியான கசிவுகள், நோக்கியா 9 ஆனது பல்வேறு மாறுபாடுகளிலும், பல்வேறு டிஸ்பிளே அளவுகளுடன் வெளிவரும் என்று கூறுகின்றன.
Post a Comment