கைரேகை ஸ்கானர் கொண்ட முதல் ஸ்மார்ட் கைப்பேசி!!

டூகி நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கானர் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஓ ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியான தகவல்களில், ஐபோன் ஓ ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கானர் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டது. எனினும் அப்பிள் இந்த அம்சத்தை ஐபோன் ஓ மாடலில் வழங்கவில்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் கலக்ஸி ளு9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கானர் வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
எனினும், இதுவரை எந்த நிறுவனமும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கானர் கொண்ட முதல் ஸ்மார்ட் தொலைபேசியை டூகி, விவோ போன்ற நிறுவனங்கள் வெளியிடுமா அல்லது சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் வழங்குமா என்பதை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post