எதிர்கால உலகத்தின் பாரிய பிரச்சினைக்கு தீர்வாக வருகின்றது அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கார்கள்!!

இப்போதைய உலகின் பாரிய அச்சுறுத்தல் வெப்பமயமாதல். புவி வெப்பமடைவதால் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கு வாகனங்களும் ஓர் காரணம் என்றே அறியப்படுகின்றது. இதற்கோர் தீர்வுகாணும் முகமாக எதிர்காலத்தில் முற்றுமுழுதாக சூரிய சக்தியில் இயங்கும் வகையில் கார்கள் உருவாக்கப்படவுள்ளன.

தற்போது சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் காணப்பட்டாலும் முற்றுமுழுதாக சூரிய சக்தியில் மட்டும் இயங்கும் வாகனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்தவகையில், 2019ஆம் ஆண்டு லைட்இயர் (LightYear ) எனப்படும் நிறுவனம் முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இந்த கார்களின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படுகின்றது.
எனினும், இதன் ஆரம்பகட்டமாக எதிர்வரும் வருடத்தில் 10 கார்களை மட்டுமே குறித்த நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தக்கார்கள் பயன்பாட்டைப்பொறுத்து தொடர் உற்பத்திகள் வெளிவரும் எனக் குறிப்பிடப்படுகின்றது. எதிர்கால உலகிற்கு அவசியமான இந்தவகை கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இதன்பக்கவிளைவு எவ்வாறு அமையும் என்பது காரில் பயணம் செய்யும் போதே தெரியவரும் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post