பிரபல தேடல் பொறியான கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில், பணத்தை பரிமாற்றம் செய்வதற்கான புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில், பணப்பரிமாற்றமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. மக்கள் அனைவரும், தங்கள் செல்போன் மூலமே அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.
இந்நிலையில், பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வசதியைக் கொண்டு வந்துள்ளது. இந்த வசதியானது, கூகுள் பே சேவையின் ஒரு அங்கமாக இது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலமாக, சுமார் 9,999 டாலர்கள் வரை பரிமாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை அம்சங்களைக் கொண்ட இந்த சேவையானது தற்போதைக்கு ஆப்பிளின் iOS ஆப்களில் மட்டுமே கிடைக்கின்றது. விரைவில் இது ஆன்ட்ராய்டு போன்களுக்கும் விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment